Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனின் 22% நிலத்தை ரஷ்யா கைப்பற்றியது

வாசிப்புநேரம் -
உக்ரேனின் 22% நிலத்தை ரஷ்யா கைப்பற்றியது

(Alexander NEMENOV / AFP)

ரஷ்யா, உக்ரேனின் நான்கு வட்டாரங்களை அதனுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது. 

ஸாப்போரிஸியா, லுஹான்ஸ்க், டானட்ஸ்க், ஹெர்சன் (Zaporizhzhia, Luhansk, Donetsk, Kherson) ஆகிய வட்டாரங்கள் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அந்த 4 வட்டாரங்களையும் சேர்த்து ரஷ்யா உக்ரேனின் 15 விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளது. 

ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரேனின் கிரைமியா தீபகற்பத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. 

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 4 உக்ரேனிய வட்டாரங்கள், கிரைமியா ஆகிய எல்லாப் பகுதிகளையும் சேர்ந்து உக்ரேனின் சுமார் 22 விழுக்காட்டு நிலப்பரப்புத் தற்போது ரஷ்யாவுக்குச் சொந்தமாகிவிட்டது. 

ஸாப்போரிஸியா, லுஹான்ஸ்க், டானட்ஸ்க், ஹெர்சன் ஆகியவை ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நேற்றிரவு மாஸ்கோவில் நடைபெற்றது. 

அதில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் போரைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரேனுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், உக்ரேனின் சில வட்டாரங்கள் ரஷ்யாவுடன் சேர்ந்தது சேர்ந்ததுதான், அதுபற்றிய பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் அவர் கூறிவிட்டார். 


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்