திடல்தடப் போட்டிகளில் தடை - ரஷ்யா மேல்முறையீடு
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: REUTERS/Ramil Sitdikov
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்குத் திடல்தடப் போட்டிகளில் பங்கெடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்கிறது.
ரஷ்யா - உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ரஷ்ய விளையாட்டாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தடையை நீட்டிக்க அனைத்துலகத் திடல்தட மன்றம் முடிவெடுத்திருக்கிறது.
அந்த முடிவு ரஷ்ய விளையாட்டாளர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாக ரஷ்யா கூறுகிறது.
அனைத்துலக ஒலிம்பிக் குழு ரஷ்ய விளையாட்டாளர்களுக்கு எதிரான தடையைத் தற்காலிகமாக நீக்கிய பிறகும் திடல்தட மன்றம் அந்த முடிவை எடுத்துள்ளது.
அதனால் அனைத்துலகப் போட்டிகளில் ரஷ்யாவின் பங்கெடுப்பு தொடர்ந்து தடைபடும்.
கடைசியாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2026 மிலான் பனிக்கால ஒலிம்பிக் போட்டியிலும் ரஷ்ய விளையாட்டாளர்கள் தடையைத் தாண்டி பங்கெடுத்தார்கள்.
ஆனால் அப்போது அவர்கள் ரஷ்யாவைப் பிரதிநிதிக்காமல் நடுநிலைத் தரப்பைப் பிரதிநிதித்தனர்.

ஆதாரம் : Reuters