உக்ரேனியக் கிளர்ச்சியாளர்களுக்கு இனி கடுமையான பதிலடி கொடுக்கப்படும் - எச்சரிக்கும் ரஷ்யா
வாசிப்புநேரம் -

AFP
ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் உக்ரேனியக் கிளர்ச்சியாளர்கள் இனி ஊடுருவினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.
பெல்கோரோட் (Belgorod) வட்டாரத்தில் ஊடுருவியவர்களை விரட்டியடித்தபோது 70 பேர் மாண்டதாக மாஸ்கோ கூறியது.
அமெரிக்கா தயாரித்த ராணுவச் சாதனங்களைப் பயன்படுத்தி ரஷ்ய வட்டாரங்களில் உக்ரேனியர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கிரெம்ளின் தெரிவித்தது.
அமெரிக்காவின் Humvee ரக ராணுவ கனரக வாகனம் குறித்த காணொளியை மாஸ்கோ வெளியிட்டது. தாக்குதல்
நடத்தியவர்களை விரட்டியபோது அந்த வாகனம் நாசமானதாக அது சொன்னது.
பூசலில் மேற்கத்திய நாடுகளின் நேரடிப் பங்களிப்பு அதிகரித்திருப்பதாகக் கிரெம்ளின் சாடியது. ஆனால் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தும்படி உக்ரேனை ஊக்குவிக்கவில்லை என்று வாஷிங்டன் கூறியது.

ஆதாரம் : AGENCIES