Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உக்ரேனுக்குக் கொடுக்கப்படும் போர்விமானங்கள் அழிக்கப்படும்"

வாசிப்புநேரம் -
"உக்ரேனுக்குக் கொடுக்கப்படும் போர்விமானங்கள் அழிக்கப்படும்"

(படம்: Russian Defence Ministry/Handout via REUTERS)

உக்ரேனுக்கு நேட்டோவும் மற்ற நாடுகளும் கொடுக்கும் போர்விமானங்கள் அழிக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருக்கிறது. 

உக்ரேனுக்குப் போரில் உதவ 25 MIG-29-ரகப் போர்விமானங்களைத் தரப்போவதாக போலந்தும் (Poland) ஸ்லோவேக்கியாவுக்கும் (Slovakia) அறிவித்தன. 

அதை ஒட்டி ரஷ்யா அந்த எச்சரிக்கையை விடுத்தது. 

நேட்டோ உக்ரேனுக்கு ஆயுதம் தந்தால் அது ரஷ்யப் படையின் தாக்குதலுக்கு இலக்காகும் என்று கிரேம்ளின் ஏற்கனவே எச்சரித்திருக்கிறது. 

போர் விமானங்கள் வேண்டும் என்று உக்ரேன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறது. 

ஆனால் அமெரிக்கா போர்விமானங்களைத் தர மறுத்துவிட்டது. 

அதனால் போர் பெரிதாகலாம் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

இவ்வாரத்தில் அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத்தைக் கருங்கடலில் சுட்டுத்தள்ளிய விமானியை ரஷ்யா கெளரவித்திருக்கிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்