Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 57,000க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றுச் சம்பவங்கள்

வாசிப்புநேரம் -

ரஷ்யாவில் புதிதாக 57,212 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தினசரி கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதுவே ஆக அதிகமானது என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது. 

கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 16,000க்கும் அதிகமானோர் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ரஷ்யா கடந்த சில மாதங்களாகப் பல்வேறு தடுப்புமருந்துகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் சுமார் பாதிப்பேருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அங்குப் பலருக்கும் தடுப்பூசி குறித்து சந்தேகம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. 

ரஷ்யாவில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 325,000ஐக் கடந்துள்ளது. ஐரோப்பாவில் கிருமித்தொற்றால் ஆக அதிகமானோர் மாண்டது அங்குதான். 

உலக அளவில் கிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்புப் பதிவான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்