Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜப்பானுக்கு அருகில் ரஷ்ய ராணுவப் பயிற்சிகள் - வட்டாரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
ஜப்பானுக்கு அருகே ரஷ்யா ராணுவத் தற்காப்புப் பயிற்சிகளை மேற்கொண்டதால் அந்த வட்டாரத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2 நாளுக்கு முன்பு ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) உக்ரேன் தலைநகர் கீவுக்குச் சென்றிருந்தபோது ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்தன.

ரஷ்யாவின் வலிமையைக் காட்ட அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பானுக்கு வடகே உள்ள குரில் (Kuril) தீவுகளில் கடலோரத் தற்காப்பு ஏவுகணை அமைப்பு விரிவுபடுத்தப்பட்டதாக ரஷ்யா கூறியிருக்கிறது.

அதனால் அந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா அதிக ராணுவ வீரர்களை அந்த வட்டாரத்தில் வைத்திருப்பதால் ரஷ்யா அதன் தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்