Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவிற்குத் தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்: உக்ரேனிய அதிபர்

வாசிப்புநேரம் -

ரஷ்யாவிற்குத் தக்க தண்டனையை வழங்கும்படி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது நாட்டின் பிரதேசத்தை மாஸ்கோ திருட முயற்சி செய்வதாகவும் மக்களைக் கொலை செய்வதாகவும் அவர் சொன்னார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபையில் காணொளி வழி உரையாற்றிய திரு. ஸெலென்ஸ்கி, குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யா அதன் தாக்குதல் திட்டங்களைத்  தீவிரப்படுத்தியுள்ளது.

அது 300,000 போர்க்காலப் படையினரைத் திரட்டுவதால் களத்தில் உள்ள துருப்பினரின் எண்ணிக்கை 2 மடங்குவரை அதிகரிக்கலாம்.

மாஸ்கோவைத் தண்டிப்பது உள்ளிட்ட அமைதிக்கான 5 அம்சத் திட்டத்தைத் திரு. ஸெலென்ஸ்கி பரிந்துரைத்தார்.

6,000 பொதுமக்கள், இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆகியோர் மடிவதற்குத் காரணமான போருக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.

அத்துடன், உக்ரேன் போர் குறித்து நடுநிலையான போக்கைக் கொண்டுள்ள நாடுகளையும் திரு. ஸெலென்ஸ்கி சாடினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்