Skip to main content
உக்ரேன் மீது ரஷ்யா ஆகப்பெரிய ஆகாயத் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா ஆகப்பெரிய ஆகாயத் தாக்குதல்

வாசிப்புநேரம் -
உக்ரேன் மீது ரஷ்யா ஆகப்பெரிய ஆகாயத் தாக்குதல்

(படம்: YURIY DYACHYSHYN / AFP)

ரஷ்யா, போர் தொடங்கியதுமுதல் இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரேன் மீது ஆகப்பெரிய ஆகாயத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஒரே நேரத்தில் பல நகரங்கள் தாக்கப்பட்டன.

குறைந்தது 30 பேர் மாண்டனர். 160க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

சுமார் 150 ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக உக்ரேனிய ராணுவம் கூறியது.

ஒரே நேரத்தில் அத்தனை நகரங்கள் தாக்கப்படுவதை இதற்குமுன் பார்த்ததில்லை என்றும் அது குறிப்பிட்டது.

ரஷ்யா அதனிடம் உள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியிருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறினார்.

தலைநகர் கீவ், லீவ் , தெற்கில் ஒடேசா, ஸப்போரிஸ்ஸியா, ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் டினிப்ரோ, கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்கள் தாக்கப்பட்டன.

இவ்வாரத் தொடக்கத்தில் கிரைமியா வட்டாரத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பலை உக்ரேன் தாக்கிச் சேதப்படுத்தியது.

அதற்குப் பதிலடியாக ரஷ்யா விரிவான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்