Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் வழக்கறிஞர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி...காரணம்?

வாசிப்புநேரம் -

உக்ரேனில் போருக்கு அனுப்பப்படும் ரஷ்யர்களின்  பட்டியலில் இருந்து தப்பிக்க முயல்வோருக்கு  அந்நாட்டு வழக்கறிஞர்கள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

உக்ரேன் மீது நடத்தப்படும் போரில் ரஷ்யாவின் ராணுவப்படைகளை வலுவாக்க 300,000 போர் வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்படுவார்கள் என, அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) செப்டம்பர் 21ஆம் தேதி அறிவித்தார்.

அன்றிலிருந்து தங்களது ஆதரவை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரஷ்ய வழக்கறிஞர்களும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவித்தனர். 

போருக்குச் செல்வதைத் தவிர்க்க, நூற்றுக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி,  கஸக்ஸ்த்தான் (Kazakhstan), ஜார்ஜியா (Georgia), பின்லந்து (Finland) ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் பலர் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பவர்களிடமிருந்து மறைந்து வாழ்கின்றனர்.

"மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறார்கள். இது போருக்கான காலவரையற்ற ஆட்சேர்ப்புத் திட்டமாக அமைந்துள்ளது. 

ராணுவத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. 

மரணம், காயம் அடைவது அல்லது ராணுவத்தில் சேர்வதற்கான உத்தரவுகளை மீறியதற்காகச் சிறைக்குச் செல்வதுதான் ஒரே வழி” 

என Citizen. Army. Law என்ற வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த சேர்கேய் கிரிவென்கோ (Sergei Krivenko) கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்