Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

$5மில்லியன் வேளாண் இயந்திரங்களை உக்ரேனிலிருந்து களவாடிய ரஷ்யா...ஆனால் பயன்படுத்த முடியவில்லை

வாசிப்புநேரம் -

ரஷ்ய ராணுவம் உக்ரேன் மீது படையெடுத்த பின் அங்கிருந்து சுமார் 5 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள வேளாண் இயந்திரங்களைக் கொள்ளையடித்திருப்பதாக CNN அறிக்கை கூறியது.

ரஷ்யா அவற்றை கப்பல் வழி செஷ்னியாவுக்கு(Chechnya) அனுப்பியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

ரஷ்ய ராணுவம் 300,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள அறுவடை இயந்திரம் உட்பட அத்தகைய 27 இயந்திரங்களைக் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவற்றை 700 மைல் தூரத்துக்குக் கொண்டு சென்ற பிறகு, GPS வசதி பொருத்தபட்ட அந்த இயந்திரங்களில் பலவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதை ரஷ்யா கண்டுபிடித்தது.

அந்த இயந்திரங்களை உக்ரேனிலிருந்து செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை ரஷ்யா அறிந்திருக்கவில்லை.

சில இயந்திரங்களை களவாடியவர்களால் முடுக்கிவிடக் கூட முடியவில்லை என்று CNN அறிக்கை குறிப்பிட்டது.

இது தவிர தானியங்கள், அறுவடைச் சாதனங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா களவாடிக் கொண்டு செல்வதாக நகர நிர்வாகம் கூறியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்