Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யப் படைத்திரட்டு - ராணுவத்தில் சேர்வதைத் தவிர்க்க நாட்டிலிருந்து சிலர் வெளியேற்றம்

வாசிப்புநேரம் -
ரஷ்யப் படைத்திரட்டு - ராணுவத்தில் சேர்வதைத் தவிர்க்க நாட்டிலிருந்து சிலர் வெளியேற்றம்

(படம்: Alexander NEMENOV / AFP)

மாஸ்கோ அதன் கட்டாயப் படைத்திரட்டு நடவடிக்கையை நேற்று (22 செப்டம்பர்) தொடங்கியுள்ளது. 

உக்ரேனுடனான போரில் தடுமாற்றம் அடைந்திருக்கும் ரஷ்யா, கூடுதல் ஆதரவு பெறப் படைத்திரட்டைச் செயல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே ராணுவத்தில் சேர்வதைத் தவிர்க்க ரஷ்யாவைச் சேர்ந்த சில ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக நம்பப்படுகிறது. 

வரும் நாள்களில் மாஸ்கோ கைப்பற்றிய உக்ரேனிய வட்டாரங்களின் தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அதில் கைப்பற்றப்பட்ட இடங்கள் ரஷ்யாவின் ஒரு பகுதியாவது குறித்துத் தீர்மானிக்கப்படும். 

உக்ரேனியப் படைகள் ஹார்கிவ் வட்டாரத்தை ரஷ்யாவிடமிருந்து மீட்டெடுத்ததைத் தொடர்ந்து மாஸ்கோ படைத்திரட்டை அறிவித்தது. 

7 மாதப் போரில் அது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 

இதற்கிடையே, படைத்திரட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது 10,000 பேர் போரில் சண்டையிட முன்வந்திருப்பதாக ரஷ்ய ராணுவம் கூறியிருக்கிறது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa