ரஷ்யா கைப்பற்றிய உக்ரேனிய வட்டாரங்களை அதனுடன் இணைப்பது குறித்து வாக்கெடுப்பு

(கோப்புப் படம்: AP Photo/Efrem Lukatsky)
ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரேனியப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் திட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதனால் மீண்டும் போர் மூர்க்கமடையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உக்ரேனின் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள நான்கு வட்டாரங்களைத் தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷ்யா இன்று பொது வாக்கெடுப்பு நடத்துகிறது.
ரஷ்யாவின் அந்த முயற்சிக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.