Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஃபின்லந்துக்கு மின்சக்தி ஏற்றுமதியை நிறுத்தும் ரஷ்யா

வாசிப்புநேரம் -

ரஷ்யா ஃபின்லந்துக்கு (Finland) மின்சக்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தியிருக்கிறது.

அதற்கான கட்டணத்தைப் பெறவில்லை என்று ரஷ்யா கூறியிருக்கிறது.

20 வருடத்திற்கும் மேலாகத் தொடரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வரலாற்றில் முதன்முறையாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று (14 மே) காலை 1 மணிக்கு மின்சக்தி விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து 10 விழுக்காடு மின்சக்தி மட்டுமே எடுப்பதாக ஃபின்லந்து கூறியிருக்கிறது.

ஆகவே நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்குத் தடையேதும் ஏற்படாது என்று அது குறிப்பிட்டது.

அந்தக் குறைபாட்டை அண்டை நாடான சுவீடனிடமிருந்து (Sweden) தீர்த்துக்கொள்ள முடியும் என்று ஃபின்லந்து தெரிவித்தது.

தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாகவும் அது சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்