Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'மாஸ்கோவைக் கோபப்படுத்த அமெரிக்கா உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்புகிறது!'

வாசிப்புநேரம் -


அமெரிக்கா உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்புவது மாஸ்கோவைச் (Moscow) சினமூட்டிப் பார்க்கும் மற்றொரு செயல் என அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவை வீழ்த்த உத்திபூர்வமாக அமெரிக்கா திட்டமிடுவதாகவும் திரு. அனட்டோலி அன்ட்டோனோவ் (Anatoly Antonov) குற்றஞ்சாட்டினார்.

உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்புவதுகுறித்து வெகுவிரைவில் அறிவிக்கப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டிச் சில ஊடகங்கள் தகவல் அளித்தன.


ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) உக்ரேனுக்கு Leopard 2 ரகக் கவச வாகனங்களை அனுப்ப முடிவெடுத்ததாக ஜெர்மானிய ஊடகங்கள் முன்னதாகக் குறிப்பிட்டன.

அத்தகைய கவச வாகனங்களைப் பயன்படுத்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் அவ்வாறே செய்ய ஜெர்மனி அனுமதி வழங்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதுகுறித்து ஜெர்மனியோ அமெரிக்காவோ இதுவரை அதிகாரத்துவத் தகவல் ஏதும் வெளியிடவில்லை.  

உக்ரேனுக்குக் கவச வாகனங்களை அனுப்புவதால் சர்ச்சை மேலும் மோசமடையலாம் எனக்கூறி அவ்விரு நாடுகளும் கடந்த வாரம் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இப்போது அவை மனம் மாறி உக்ரேனுக்கு உதவ முன்வந்துள்ளன.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்