அணுவாயுதத் தயாரிப்பில் இனி தனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை: ரஷ்யா
This audio is generated by an AI tool.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இன்று காலாவதியாகிறது.
அணுவாயுதத் தயாரப்பில் இனி தனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று ரஷ்யா கூறிவருகிறது.
'New START Treaty' எனும் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வப் பதில் ஏதும் வரவில்லை என்கிறது ரஷ்யா.
வாஷிங்டனின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக மாஸ்கோ கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), ஒப்பந்தம் முடிவுக்கு வருவதைத் தாம் விரும்பவில்லை என்று சென்ற ஆண்டு குறிப்பிட்டார்.
அதுகுறித்து அவர் விரைவில் கருத்துரைப்பார் என்று வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ (Marco Rubio) தெரிவித்தார்.
'New START Treaty' ஒப்பந்தம் 2010ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.