Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் ரஷ்யா நடத்திய ஆகாயவழித் தாக்குதலில் 9 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
உக்ரேனில் ரஷ்யா நடத்திய ஆகாயவழி தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா அமைதியை நாடவில்லை என்பதைத் தாக்குதல் காட்டுவதாக உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

அதிகாலையில் நடந்த ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 2 தங்கும் விடுதிகளும் ஒரு கல்லூரியும் தாக்கப்பட்டன.

கீவுக்கு 40 கிலோமீட்டர் தெற்கே உள்ள ரிஷிவ் (Rzhyshchiv) நகரில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸாப்போரிஸியா (Zaporizhzhia) நகரில் 2 குடியிருப்புக் கட்டடங்களும் தாக்கப்பட்டன.

கடந்த பல ஆண்டுகளில், அணுவாயுதப் பூசல் நடக்கும் சாத்தியம் தற்போது அதிகமாக உள்ளதாய் ரஷ்யா எச்சரித்துள்ளது.

Bakhmut நகரில் முன்னிலையில் சண்டையிடும் ராணுவத் துருப்பினரை அதிபர் ஸெலென்ஸ்கி சந்தித்தார்.

ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அந்தப் பகுதியில் ஆக மோசமான சண்டை நடைபெறுகிறது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்