Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனிய மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் - ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

வாசிப்புநேரம் -
உக்ரேனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனே நிறுத்தவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உறுப்பு நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு பெரும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதற்கு எதிராக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

உக்ரேனில் சுகாதார நெருக்கடி தொடர்வது குறித்துத் தீர்மானம் கவலை தெரிவித்தது. ரஷ்யப் படையெடுப்பு அதற்கு அடிப்படைக் காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

14 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலகச் சுகாதார நிறுவனத்துக்கான கீவின் தூதர் கூறினார்.

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை உக்ரேனின் சுகாதாரக் கட்டமைப்பு மீது 900க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உலக நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்