"நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சண்டைநிறுத்தத்திற்குத் தயார்"
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Pool via AFP/Vyacheslav Prokofyev)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் சண்டைநிறுத்த உடன்பாட்டைக் கொள்கையளவில் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் சில மாற்றங்களை வலியுறுத்திய அவர் கடுமையான நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
உக்ரேன் ஒருமாதச் சண்டைநிறுத்தத்தை மீண்டும் படைதிரட்டுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று அஞ்சுவதாகத் திரு புட்டின் கூறினார்.
உக்ரேனின் படைத்திரட்டையும் அதன் ஆயுத விநியோகத்தையும் தடுத்து நிறுத்த அவர் விரும்புகிறார்.
கூர்ஸ்க் (Kursk) வட்டாரத்திலிருந்து உக்ரேனியப் படையினர் மீட்டுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக அவர்கள் சரணடைய வேண்டும் என்றார் திரு புட்டின்.
பின்னடைவுகள் இருந்தபோதும், ரஷ்யாவிடமிருந்து நல்ல அறிகுறிகள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump).
திரு புட்டின் உடன்பாடு செய்துகொள்ளாவிட்டால், அது உலகுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருக்கும் என்றார் திரு டிரம்ப்.

ஆதாரம் : Others