Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'எப்படிக் கையை உடைப்பது?' - இணையத்தில் அதிகரித்துள்ள தேடல்கள்

வாசிப்புநேரம் -

ரஷ்யாவில் பகுதி படைத் திரட்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு ஆண்கள் சிலர் அதிலிருந்து தப்ப முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கான விமானச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

'ரஷ்யாவிலிருந்து எப்படி வெளியாவது?'...

'வீட்டில் எப்படிக் கையை உடைத்துக்கொள்வது?'...

ஆகிய கேள்விகள் Google தளத்தில் அதிகம் தேடப்படுவதாக The Washington Post செய்தி நிறுவனம் கூறியது.

ராணுவப் பயிற்சிக்கு வர பல ஆண்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு எழுத்துபூர்வமாகவும் மற்றவர்களுக்குத் தொலைபேசி மூலமாகவும் அழைப்பு வந்ததாக The Washington Post சொன்னது.

உக்ரேன் போரில் சண்டையிடுவதற்காகப் படைத் திரட்டு அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே உக்ரேன் போரையும் படைத் திரட்டையும் எதிர்த்து ரஷ்யாவின் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்