Skip to main content
விமானத்தில் தொந்தரவு கொடுத்த பயணி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானத்தில் தொந்தரவு கொடுத்த பயணி - வழக்குத் தொடுத்த Ryanair

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Ryanair விமானத்தில் தொந்தரவு விளைவித்து விமானத்தைத் திசைதிருப்பச் செய்த பயணி மீது நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

இழப்பீடாக 15,000 யூரோவை (சுமார் 21,000 வெள்ளி) அது கோருகிறது.

சென்ற ஆண்டு (2024) ஏப்ரல் 9ஆம் தேதியன்று டப்ளினிலிருந்து (Dublin) ஸ்பெயினில் இருக்கும் Lanzarote தீவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சம்பவம் நடந்தது.

பயணி மன்னிக்க முடியாத முறையில் நடந்துகொண்டதாக நிறுவனம் கூறியது.

அதன் விளைவாக விமானம் போர்ச்சுகலின் (Portugal) போர்ட்டோ (Porto) நகருக்குத் திசைதிருப்பப்பட்டது. ஓரிரவு அது தடங்கலைச் சந்தித்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குமிடக் கட்டணம், செலவுப் பணம், விமானத்தைத் தரையிறக்குவதற்கான கட்டணம் முதலியவற்றுக்கு 15,000 யூரோ (சுமார் 21,000 வெள்ளி) செலவானது என்று நிறுவனம் சொன்னது.

அந்தப் பணத்தைப் பயணியிடமிருந்து பெற வழக்குத் தொடுத்துள்ளதாக நிறுவனம் சொன்னது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்