Samsung Electronics நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரைத் தொட்டது
படம்: Jung Yeon-je/AFP
தென்கொரியாவின் Samsung Electronics நிறுவனத்தின் மதிப்பு முதல்முறையாக ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அதற்கு முக்கிய காரணம்.
அதற்குத் தேவைப்படும் அதிநவீன சில்லுகளைத் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களில் Samsung Electronics-உம் ஒன்று.
அதன் முதல் காலாண்டு லாபம் புதிய உச்சத்தைத் தொட்டதாகச் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது.
இன்று காலை நிறுவனத்தின் பங்குவிலைகள் கிட்டத்தட்ட 12 விழுக்காடு உயர்ந்ததோடு அதன் சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்தது.
தென்கொரியாவின் Kospi குறியீடு சுமார் 5 விழுக்காடு உயர்ந்து முதல்முறையாக 7,000 புள்ளிகளைக் கடந்தது.
கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் Samsung நிறுவனத்தின் பங்குவிலைகள் சுமார் 300 விழுக்காடு உயர்ந்தன.
ஆசியாவிலேயே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியுள்ள 2ஆவது நிறுவனம் அதுவே. தைவானின் Taiwan Semiconductor Manufacturing நிறுவனம் முதலில் அந்தச் சாதனையை படைத்தது.