சவுதி அரேபியாவுக்கு F-35 போர்விமானங்கள்: டிரம்ப்
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), சவுதி அரேபியாவுக்கு இஸ்ரேலைப் போலவே அதிநவீன F-35 போர்விமானங்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் (Mohammed bin Salman) சந்தித்தபின் அவர் பேசினார்.
சவுதி அரேபியா, இஸ்ரேல் இரண்டுமே அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்றார் திரு டிரம்ப்.
தற்போது மத்திய கிழக்கில் F-35 போர் விமானங்களை இஸ்ரேல் மட்டுமே வைத்திருக்கிறது.
அமெரிக்காவும் சவுதியும் தற்காப்பு உடன்பாட்டைச் செய்துகொண்டதாகவும் திரு டிரம்ப் சொன்னார்.
பட்டத்து இளவரசர் முகமது சல்மான் ஏழு ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருக்கும் முதல் பயணம் இது.
அவர் அமெரிக்காவில் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார்.
இதற்குமுன் ரியாத்துக்கு மே மாதம் திரு டிரம்ப் சென்றபோது 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாக சவுதி அரேபியா வாக்கு தந்தது.