Skip to main content
சவுதி அரேபியாவில் வெளிநாட்டுத் தூதரங்களை நோக்கித் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபியாவில் வெளிநாட்டுத் தூதரங்களை நோக்கித் தாக்குதல்

வாசிப்புநேரம் -
சவுதி அரேபியாவில் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலை முறியடித்ததாய் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

அது பற்றி அமைச்சு X தளத்தில் பதிவிட்டது. சவுதி அரேபியா கிழக்குப் பகுதியில் மற்றோர் ஆளில்லா வானூர்தியையும் இடைமறித்துள்ளது.

குவைத்திலும் அதே நிலை.

ஈரான் அனுப்பிய பல ஆளில்லா வானூர்திகளைத் தங்கள் ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பு இடைமறித்துத் தகர்த்தாக குவைத் சொன்னது.

அமெரிக்கா- இஸ்ரேல் இரு நாடுகளும் ஈரானைத் தாக்க, ஈரான் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளைக் குறிவைக்கிறது.

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக உலக எரிசக்திச் சந்தையை நிலைகுலைய வைக்கப்போவதாக ஈரான் சூளுரைத்திருக்கிறது.

பத்து நாள்களுக்கு மேலாக நீடிக்கும் போரால் உலக நாடுகள் அதிர்ந்து போயிருக்கின்றன.

ஈரான் எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடியிருப்பது உலக அளவில் எரிவாயுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பில் இருப்பதைக் கொண்டு சமாளிக்கும் நாடுகள் இனி என்னவாகும் என்று தெரியாமல் தவிக்கின்றன.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்