Skip to main content
சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் கோளாறு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் கோளாறு

வாசிப்புநேரம் -
சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் கோளாறு

(படம்: Bandar Algaloud/Saudi Royal Court/Handout via REUTERS)

சவுதி அரேபிய மன்னர் சல்மான் (Salman), நுரையீரல் கோளாற்றுக்குச் சிகிச்சை பெறவிருக்கிறார்.

88 வயது மன்னர் மருத்துவப் பரிசோதனைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து அந்தத் தகவல் வெளிவந்தது.

ஜித்தா (Jeddah) உள்ள அல்-சலாம் அரண்மனையில் மன்னர் சல்மான் சிகிச்சை பெறவுள்ளதாக சவுதி அரேபிய அரசாங்க ஊடகம் கூறியது.

மன்னரின் உடல்நிலையால் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தனது ஜப்பானியப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

அது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் யோஷிமாஸா ஹயாஷி (Yoshimasa Hayashi) கூறினார்.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்