Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Sawadeeka... தாய்லந்தில் வணக்கம்... ஆனால் தமிழ்த் திரைப்படப் பாடல் தெரியுமா?

வாசிப்புநேரம் -
Sawadeeka... தாய்லந்தில் வணக்கம் என்பதே அதன் பொருள்..

அதே பெயர் கொண்ட பாடல் அடுத்த ஆண்டு (2025) பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (27 டிசம்பர்) திரைப்படத்தின் முதல் பாடல் 'Sawadeeka' எனும் பெயரில் வெளியானது.

அது இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

பாடலைக் கேட்ட இணையவாசிகளால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நடிகர் அஜித்குமாரை ஈராண்டுக்குப் பிறகு திரையில் பார்க்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வருணிக்க முடியவில்லை என்றனர் சிலர்.

'விடாமுயற்சி' திரைப்படத்தில் அஜித்குமாரும் திரிஷாவும் இணைந்து நடிக்கின்றனர்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்