கம்போடியாவிலிருந்து மடகாஸ்கருக்கு இடம்பெயர்ந்த இணைய மோசடிக் கும்பல்கள்
வாசிப்புநேரம் -
படம்: Ludovic MARIN / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கம்போடியாவில் செயல்பட்ட இணைய மோசடிக் கும்பல்கள் ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கருக்கு (Madagascar) இடம்பெயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
மடகாஸ்கரில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 13 மோசடி நிலையங்கள் முறியடிக்கப்பட்டன.
அமெரிக்க நீதித்துறையுடன் இணைந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 148 சீன நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் சுமார் 52 மில்லியன் டாலர் (66.5 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள மின்னிலக்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடிக் கும்பல்கள் காதல், முதலீடு, மின்னிலக்க நாணயம் ஆகியவற்றின் பெயரில் மக்களை ஏமாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலை தருவதாகக் கூறி ஒரு கும்பல் அதன் நடவடிக்கைகளில் ஆப்பிரிக்க நாட்டவர்களையும் சேர்த்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மடகாஸ்கருக்கு வந்ததும் அவர்களின் கடப்பிதழ்கள் பறிக்கப்பட்டு மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
கென்யா, ருவாண்டா, உகாண்டா, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஒரு மோசடிக் கும்பலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர் சூய் கொக் வா (Chui Kok Wa), முன்னர் கம்போடியாவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்போடியாவில் காவல்துறை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாலும் தாய்லந்துடனான மோதலாலும் மோசடிக் கும்பல்கள் மடகாஸ்கருக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
தென்கிழக்காசியாவில் மோசடி நிலையங்கள் மூடப்படுவதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் அவை அதிகரிப்பதாக அமெரிக்கக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.

ஆதாரம் : AFP