ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி
வாசிப்புநேரம் -

படம்: ERWIN SCHERIAU / APA / AFP
ஆஸ்திரியாவின் கிராஸ் (Graz) நகரிலுள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. அதில் 10 பேர் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பலர் காயமுற்றதாக Reuters, BBC ஆகிய ஊடகங்களும் ஆஸ்திரிய ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் தன்னையே சுட்டுக்கொண்டு மாண்டதாக ஆஸ்திரிய ஊடகம் Kronen Zeitung தகவல் வெளியிட்டிருக்கிறது.
காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் தன்னையே சுட்டுக்கொண்டு மாண்டதாக ஆஸ்திரிய ஊடகம் Kronen Zeitung தகவல் வெளியிட்டிருக்கிறது.
காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.
இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்....
'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஆதாரம் : Reuters/BBC