Skip to main content
கழிப்பறையைச் சீர்செய்யும்படிப் பிரதமரிடம் கேட்ட சிறுவன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கழிப்பறையைச் சீர்செய்யும்படிப் பிரதமரிடம் கேட்ட சிறுவன்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியப் பிரதமரிடம் சிறுவன் கொடுத்த புகார் ஒன்று இணையவாசிகளைச் சிரிக்கவைத்துள்ளது.

பள்ளிக் கழிப்பறைகள் பழுதாகியிருப்பதாகவும் அவற்றைச் சீர்செய்யவேண்டும் என்றும் சிறுவன் புலம்பியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (14 மார்ச்) பேராக் மாநிலத்தின் குமுந்திங் (Kamunting) ரமதான் சந்தைக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) சென்றிருந்தார்.

அங்கு அவர் பொதுமக்களைச் சந்தித்தபோது சிறுவர்கள் சிலரிடமும் பேசினார்.

அவர்களில் ஒரு சிறுவன் பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே வேலை செய்கின்றன என்று புகாரளித்தார்.

கழிப்பறைகள் சீர்செய்யப்படும் என்று திரு அன்வார் உறுதியளித்தார்.

காணொளியைக் கண்ட இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்துரைத்தனர்.

'வழக்கமாக ஆசிரியரிடம் புகார் செய்யவேண்டும். நீங்கள் பிரதமரிடமே கூறியிருக்கிறீர்கள்!'

'பிரதமரிடமே நேரடியாகப் பிரச்சினையைச் சொல்லிவிட்டீர்களா? நடவடிக்கை எடுக்கப்படும்'

என்று அவர்கள் கூறினர்.

பள்ளிக் கழிப்பறைகள் இப்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக The Star ஊடகம் சொன்னது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்