Skip to main content
மலேசியாவில் நாளை பல பள்ளிகள் திறக்கப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியாவில் நாளை பல பள்ளிகள் திறக்கப்படும்

வாசிப்புநேரம் -
மலேசியாவில் நாளை பல பள்ளிகள் திறக்கப்படும்

படம்: REUTERS/Hasnoor Hussain

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவில் பெரும்பாலான பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும்.

புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

ஜொகூர் (Johor) மாநிலத்திலும் கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகியவற்றின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படாது.

கோலாலம்பூரில் பங்சார் (Bangsar), பூடு (Pudu) ஆகிய பகுதிகளில் புகைமூட்டம்.

சிலாங்கூரில் உலு லங்காட் (Hulu Langat), கொம்பாக் (Gombak), பெத்தாலிங் பெர்டானா (Petaling Perdana) பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பெற்றோரும் பள்ளி நிர்வாகத்தினரும் அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பார்க்குமாறு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் (Fadhlina Sidek) கேட்டுக்கொண்டார்.

இன்று மாலை 4 மணிக்கு மலேசியாவின் 14 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

ஜொகூரில் மிக அதிகமான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவானது.

பாசிர் கூடாங்கில் (Pasir Gudang) குறியீடு 177ஆகவும் லார்க்கினில் (Larkin) 176ஆகவும் இருந்தது.

101 முதல் 200 வரையிலான குறியீடு காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.

அது 200ஐத் தாண்டினால் மிகமோசமான நிலையாகக் கருதப்படும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்