Skip to main content
மலாக்கா, சிங்கப்பூர் நீரிணையில் தொடரும் கடற்கொள்ளை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலாக்கா, சிங்கப்பூர் நீரிணையில் தொடரும் கடற்கொள்ளை

வாசிப்புநேரம் -
மலாக்கா, சிங்கப்பூர் நீரிணையில் தொடரும் கடற்கொள்ளை
படம்: Reuters
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலாக்கா, சிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பது ஒரு பிரச்சினையாகத் தொடர்கிறது.

2025இல் மொத்தம் 108 சம்பவங்கள் பதிவாகின. முந்தைய ஆண்டைவிட அது 74 விழுக்காடு அதிகம்.

உலகிலேயே ஆகப் பரபரப்பான நீரிணையில் போக்குவரத்து மேலும் அதிகரிக்கிறது. உலக வர்த்தகப் பதற்றத்தால் முன்பு எப்போதையும்விட நீரிணையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

உலகக் கடல் வர்த்தகத்தில் சுமார் 60 விழுக்காட்டை ஏந்திச் செல்லும் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன்படுத்துகின்றன.

ஆண்டுக்கு 90,000க்கும் அதிகமான கப்பல்கள் செல்வதால் கடற்கொள்ளையர் அந்த நீரிணையைக் குறிவைக்கின்றனர்.

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அந்த நீர்ப்பாதையை நம்பியிருக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் குறுகிய நீர்ப்பாதையில் கடற்கொள்ளைகளைத் தடுப்பது எப்படி என்று ஆராயப்படுகிறது.

திருடுவதே கடற்கொள்ளையரின் நோக்கம்.

பெரும்பாலான சம்பவங்களில் கப்பல் சிப்பந்திகள் தாக்கப்படுவதில்லை.

ஆயினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிக்கிறது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்