"கிடைப்பார்களா?"ஆப்கானிஸ்தானில் வெறும் கைகளால் நிலநடுக்க இடிபாடுகளை அகற்றும் மக்கள்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Sayed Hassib
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) கிழக்குப் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தில் 800க்கும் அதிகமானோர் மாண்டனர்.
நேற்று முன்தினம் (31 ஆகஸ்ட்) ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் மலைப்பகுதிகளில் குறைந்தது 5 முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
மீட்புப் பணிகள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகப் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவர் AFP செய்தியிடம் தெரிவித்தார்.
எட்டி இருக்கும் கிராமங்களில் காயமுற்ற மேலும் பலர் இருப்பதாக அவர் கூறினார்.
அங்குள்ள மக்கள் எந்தவோர் இயந்திரமும் இன்றி வெறும் கைகளைக் கொண்டு இடிபாடுகளை அகற்றுகின்றனர்.
அவர்களில் ஒருவர் 26 வயது ஒபாய்துள்ளா ஸ்தோமான் (Obaidullah Stoman). நண்பரைத் தேடி வாடீர் (Wadir) கிராமத்திற்குச் சென்றிருந்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெருஞ்சேதத்தைக் கண்டு அவர் மனமுடைந்தார்.
'வெறும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன,' என்று துயரம் பொங்கச் சொன்னார் அவர்.
"இங்கு வருணிக்க முடியாத அளவிற்கு அச்சம், பதற்றம். குழந்தைகளும் பெண்களும் அலறுகின்றனர்.
இதுவரை எங்கள் வாழ்வில் இதுபோன்று எதையும் உணர்ந்ததில்லை," என்று வேளாண் துறை உறுப்பினர் ஒருவர் AFP செய்தியிடம் பகிர்ந்தார்.
மோசமாக பாதிக்கப்பட்ட சில கிராமங்களை இன்னமும் எட்ட முடியவில்லை என்றது ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு.

ஆதாரம் : AFP