காணாமல் போன சிங்கப்பூர் மலையேறிகளைத் தேடுவதில் தொடர்ந்து சிரமம்
Jhon Frengki Manipa via REUTERS
இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono) எரிமலையில் காணாமல் போன இரு சிங்கப்பூர் மலையேறிகளைத் தேடும் முயற்சியில் தொடர்ந்து சிரமம் நிலவுகிறது.
அவர்கள் மாண்டுவிட்டதாக அஞ்சப்படுகிறது.
வட மலுக்கு (Maluku) மாநிலத்தில் உள்ள டுக்கோனோ (Dukono) எரிமலை தொடர்ந்து சாம்பலைக் கக்குகிறது.
மழையும் தொடர்ந்து பெய்கிறது.
சாம்பல் பரவாத வேளையில் மட்டுமே தேடல் பணியை மேற்கொள்ள முடிகிறது.
எரிமலை நேற்று முன்தினம் வெடித்ததில் மூவர் காணாமல் போயினர்.
அவர்களில் ஓர் இந்தோனேசியரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணியில் சுமார் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.
வெப்ப நடவடிக்கையைக் கண்டறியும் ஆளில்லா வானூர்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.
எரிமலையிலிருந்து காப்பாற்றப்பட்ட மேலும் 7 சிங்கப்பூரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.