Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா : 'முகக்கவசத்தை நீக்கு... அல்லது வெளியே போ...'

அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில், முகக்கவசம் அணிந்திருந்ததால், ஒரு தம்பதிக்கு உணவகத்தில் சேவை மறுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில், முகக்கவசம் அணிந்திருந்ததால், ஒரு தம்பதிக்கு உணவகத்தில் சேவை மறுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

தங்கள் 4 மாதக் குழந்தையின் பாதுகாப்புக் கருதி, உணவகத்தில் இருந்தபோது முகக்கவசம் அணிந்திருந்ததாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

ஆனால், உணவக ஊழியர் ஒருவர் அவர்களிடம், முகக்கவசத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு உடன்பட மறுத்ததால், உணவகத்தைவிட்டு வெளியேறுமாறு தம்பதி கேட்டுக்கொள்ளப்பட்டதாக The Guardian சொன்னது.

முகக்கவசம் அணியக்கூடாது என்பது அந்த உணவகத்தின் விதி.

அமெரிக்காவில் டெக்சஸ் உட்பட சில மாநிலங்களில், முகக்கவசம் அணிவது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.

முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதைத் தடை செய்ய டெக்சஸ் மாநில ஆளுநர் முயற்சி செய்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்