Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எரிமலையிலிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூரர்கள் நாடு திரும்புகின்றனர்

வாசிப்புநேரம் -
எரிமலையிலிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூரர்கள் நாடு திரும்புகின்றனர்

AFP/BNPB

வெளியீடு : 10 May 2026 10:06AM புதுப்பிப்பு : 10 May 2026 03:26PM

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட சிங்கப்பூரர்கள் இன்று (10 மே) நாடு திரும்புகின்றனர்.

மொத்தம் 7 பேர்.

வட மலுக்கு (Maluku) மாநிலத்தில் உள்ள டுக்கோனோ (Dukono) எரிமலை நேற்று முன்தினம் (8 மே) வெடித்தது.

அப்போது அங்கு 20 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள். 

மற்றவர்கள் இந்தோனேசியர்கள்.

20 பேரில் 17 பேரை அதிகாரிகள்  காப்பாற்றினர்.

காணாமல்போன மூவரைத் தேடும் பணியில் அவர்கள் இறங்கினர்.

இந்தோனேசியர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் இருவரை இன்னும் காணவில்லை.

எரிமலைப் பள்ளத்திலிருந்து 20 - 30 மீட்டர் தூரத்தில் அவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் மீது காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

அடிக்கடி வெடிக்கும் டுக்கோனோ எரிமலையில் ஏற 2024ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்