Skip to main content
விமானத்தில் தவறான தீ எச்சரிக்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானத்தில் தவறான தீ எச்சரிக்கை - அவசரமாக வெளியேறிய பயணிகளுக்குக் காயம்

வாசிப்புநேரம் -
ஸ்பெயினில் Ryanair விமானத்தில் தவறான தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் முந்திக்கொண்டு வெளியேறியதில் பலர் காயமுற்றனர்.

விமானம் ஸ்பெயினின் Palma de Mallorca விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது பயணிகள் தீ எச்சரிக்கை ஒலியைக் கேட்டனர்.

பயணிகள் காற்றடைக்கப்பட்ட சாய்வுத்தளங்களின் வழி விமானத்தைவிட்டு வெளியேற முயன்றபோது பலர் காயமுற்றனர்.

மொத்தம் 18 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. அதில் 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாவும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் Ryanair தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை (4 ஜூலை) மென்சஸ்ட்டருக்குச் (Manchester) செல்லவிருந்த விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டது.

நேற்று (5 ஜூலை) காலை பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்