Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்த் தலைவர்கள்

வாசிப்புநேரம் -
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்த் தலைவர்கள்

(படம்: Fayez Nureldine / AFP)

அதிபர் ஹலிமா யாக்கோபும் (Halimah Yacob) பிரதமர் லீ சியென் லூங்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீது அல்-நஹ்யானின் (Sheikh Khalifa Bin Zayed Al-Nahyan) மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது அதிபரான அவர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் பங்காற்றியதாகத் திருவாட்டி ஹலிமா கூறினார்.

நாட்டில் செழுமையைக் கொண்டுவர அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்ததாக அவர் சொன்னார்.

மறைந்த ஷேக் கலீஃபாவின் அன்பையும் பரிவையும் மக்கள் எப்போதும் மறக்கமுடியாது என்று திருவாட்டி. ஹலிமா குறிப்பிட்டார்.

ஷேக் கலீஃபா, அபுதாபி (Abu Dhabi), ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் சம்மேளனத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் அவர் முக்கியப் பங்காற்றியதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa