Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

வாசிப்புநேரம் -
இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

(படம்: AFP/ASHRAF AMRA)

காஸா, இஸ்ரேல் ஆகியவற்றில் உள்ள நிலைமையைப் பற்றி சிங்கப்பூர் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்லாத் தரப்பினரும், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அது கோரிக்கை விடுத்துள்ளது.

நீடித்த சண்டைநிறுத்தத்திற்கு சிங்கப்பூர் அழைப்பு விடுத்தது.

சண்டையில் ஈடுபடும் காஸா, இஸ்ரேல் ஆகியவற்றில் உள்ள அனைவரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளதை அமைச்சு சுட்டியது.

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.

அவர்கள் செய்திகளைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தூதரக உதவி தேவைப்படுவோர் இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகரில் உள்ள சிங்கப்பூரின் கௌரவத் துணைத் தூதரை அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணி நேர உதவித் தொலைபேசிச் சேவையை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்