பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் பில்லியன் டாலர் அதிபதி
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Danish Siddiqui
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் முதன்முறையாக பில்லியன் டாலர் பெருஞ்செல்வந்தர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 1.4 பில்லியன் டாலர் (சுமார் 1.81 பில்லியன் வெள்ளி).
செய்தியை BBC ஊடகம் தெரிவித்தது.
ஜுஹி சாவ்லா (Juhi Chawla), ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan), அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), கரண் ஜோஹர் (Karan Johar) ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களும் பில்லியன் டாலர் செல்வந்தர் பட்டியலில் இருக்கிறார்கள்.
திரு கான் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர ரெட் சில்லிஸ் (Red Chillies) எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார். விளம்பரங்கள், சொத்துச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் செல்வத்தைக் குவித்துள்ளார். மேலும் அவர் இந்தியாவில் விளையாடும் நைட் ரைடர் கிரிக்கெட் அணியின் உரிமையாளர். இவ்வாறு பல வழிகளில் அவர் பில்லியன் டாலர் செல்வந்தர் ஆனதாக ஆய்வாளர் ஒருவர் BBCயிடம் கூறினார்.
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட பில்லியன் டாலர் அதிபதிகள் உள்ளனர்.

ஆதாரம் : Others/BBC