சீனாவில் கத்திக்குத்துச் சம்பவம் - மூவர் மரணம்; 15 பேர் காயம்
வாசிப்புநேரம் -
சீனாவின் ஷங்ஹாய் (Shanghai) நகரில் உள்ள பேரங்காடியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.
15 பேர் காயமுற்றனர்.
சீனாவின் 75ஆவது ஆண்டுநிறைவுக்கு முந்திய நாள் (30 செப்டம்பர்) சம்பவம் நடந்தது.
தாக்குதலை நடத்திய 37 வயது லின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் தனது தனிப்பட்ட நிதிச் சிக்கலால் ஏற்பட்ட கோபத்தைக் கொட்டித் தீர்க்க ஷங்ஹாய் வரை பயணம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சென்ற மாதம் (செப்டம்பர் 2024) சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10 வயது ஜப்பானிய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு மாண்டார்.

ஆதாரம் : Reuters