Skip to main content
ஷங்ஹாய் ரயில் கட்டுமானத் தளத்தில் திடீர்ப் பள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஷங்ஹாய் ரயில் கட்டுமானத் தளத்தில் திடீர்ப் பள்ளம்

வாசிப்புநேரம் -

ஷங்ஹாயில் (Shanghai) கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நேற்று (பிப்ரவரி 12) நடந்தது.

அங்குள்ள ஜியாமின் (Jiamin) ரயில் சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் அந்த இடத்தில் தண்ணீர்க் கசிவு ஏற்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

அந்தப் பகுதியைச் சுற்றித் தடுப்புகளை வைத்து கசிவைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

ஆனால் அவர்களால் கசிவைத் தடுக்க முடியவில்லை. 

அதன் விளைவாகக் கட்டுமானத் தளத்தில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது.

அதன் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

இணையவாசிகளுக்கு ஒரே வியப்பு. 

"உலகெங்கும் அடிக்கடி திடீர்ப்பள்ளங்கள் ஏற்படுகின்றன," என்று பலரும் பதிவிட்டனர்.

2004ஆம் ஆண்டு சிங்கப்பூரின் நிக்கல் ஹைவே பகுதியில் ஏற்பட்ட கட்டுமான விபத்து நினைவுக்கு வருவதாக ஒருவர் பதிவிட்டார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்