Skip to main content
பிரபல அலையாடல் இடத்தில் சுறா மீன் தாக்கி ஒருவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரபல அலையாடல் இடத்தில் சுறா மீன் தாக்கி ஒருவர் மரணம்

வாசிப்புநேரம் -
பிரபல அலையாடல் இடத்தில் சுறா மீன் தாக்கி ஒருவர் மரணம்

(படம்: Envato Elements)

ஆஸ்திரேலியாவில் பிரபல அலையாடல் இடத்தில் 17 வயதுப் பெண் ஒருவர் சுறா மீன் தாக்கியதில் மாண்டார்.

குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள ஊரிம் (Woorim) கடற்கரையில் பெண் நீந்திக்கொண்டிருந்தபோது மீன் திடீரென்று தாக்கியது.

உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண் கடுமையாகக் காயமுற்றார்.

காவல்துறை அதிகாரிகள் அவரைக் காப்பாற்ற முனைந்தனர், ஆனால் பெண் சிறிது நேரத்தில் மாண்டார்.

அது ஆஸ்திரேலியாவில் கடந்த 5 வாரங்களில் பதிவாகியுள்ள தாக்குதல்களில் மூன்றாவது மரணம்.

வட்டாரத்தில் சுறா மீன்கள் தென்படுவதுண்டு. ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறினர்.

1791ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 1,200க்கும் மேற்பட்ட சுறா தாக்குதல்கள் நேர்ந்துள்ளன. அவற்றில் சுமார் 250 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்