அமெரிக்காவில் பலசரக்குக் கடையில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் மரணம்

(படம்: Yakima Police Department via AP)
அமெரிக்காவின் வாஷிங்டன் (Washington) மாநிலத்தில் உள்ள பலசரக்குக் கடையில் நேற்று (24 ஜனவரி) ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்தது.
மாண்டவர்களில் 2 பேர் கடையினுள் சுடப்பட்டதாகவும் 3ஆவது நபர் கடையின் வெளியே சுடப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் மாண்டவர்களுக்கும் அவர்களைத் தாக்கியவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
21 வயது ஜெரிட் ஹெடொக் (Jarid Haddock) கடையினுள் நபர்களைத் தாக்கியபின் சாலைக்கு எதிரே ஓடி ஒரு வாகனத்தைச் சுட்டார்.
வாகன ஓட்டுநரைப் பயணி இருக்கையில் உட்கார வற்புறுத்தி காரைத் திருடி ஓட்டினார் ஹெடொக்.
பல மணிநேரத் தேடலுக்குப் பிறகு ஹெடொக்கின் உறவினர் அவர் மறைந்திருக்கும் இடத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் ஹெடொக்டை அணுகியதில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஹெடொக் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஹெடொக் சம்பவ இடத்திலேயே மாண்டார்.