இலவசமாகக் குளிர்காற்றை வழங்கும் தென்கொரியக் கடைகள்
AFP
This audio is generated by an AI tool.
தென்கொரியாவில் அனல் பறக்கும் வெப்பம்...
குளிர்காற்றை வாங்கிச் செல்லும்படி வர்த்தகங்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அவற்றில் நாடு முழுதும் 18,000க்கும் அதிகமான கடைகளை வைத்துள்ள BGF Retail நிறுவனமும் ஒன்று.
பொதுமக்கள் கடைகளிலிருந்து எதுவும் வாங்க அவசியமில்லை என்று அது கூறியுள்ளதாக The Korea Herald ஊடகம் சொன்னது.
தென்கொரியாவில் வாரயிறுதியிலும் மிதமிஞ்சிய வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (26 ஜூலை) வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டிவிடுமென முன்னுரைக்கப்படுகிறது.
வெப்பம் இரவில் சற்றுத் தணிந்தாலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகப் பதிவாகலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் நம்புகிறது.
1,860க்கும் அதிகமானோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 10 பேர் மாண்டதாக The Korea Herald சொன்னது.