Skip to main content
53 விநாடி விமானப் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

53 விநாடி விமானப் பயணம் - எங்கே?

வாசிப்புநேரம் -
2.7 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க நீங்கள் விமானச் சேவையை நாடுவீர்களா?

ஸ்காட்லந்தில் உள்ள இரண்டு சிறு தீவுகளில் வசிக்கும் மக்கள் அதைத்தான் செய்கின்றனர்.

வெஸ்ட்ரே (Westray) தீவுக்கும் பாப்பா வெஸ்ட்ரே (Papa Westray) தீவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 2.7 கிலோமீட்டர் மட்டுமே.

படகில் சென்றால் அதிக நேரமாகும் என்பதால் மக்கள் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

லோகன் ஏர் நிறுவனம் வழங்கும் அந்தச் சேவைக்குக் கட்டணம் 20 டாலர் (சுமார் 25 வெள்ளி).

ஒரு நாளுக்கு இரண்டு அல்ல மூன்று முறை சேவைகள் வழங்கப்படுகின்றன.

80 பேர் அந்தச் சேவையின் மூலம் பயனடைகின்றனர்.

வானிலை சாதகமாக இருந்தால் 53 விநாடிகளில் பயணம் நிறைவுபெறும்.

அது ஆகக் குறுகிய விமானச் சேவையாக கின்னஸ் உலகச் சாதனையில் (Guinness World Record) இடம்பெற்றுள்ளது.

உலகின் முக்கிய விமான நிலையங்களின் ஓடுபாதையைக் கடக்கத் தேவைப்படும் நேரத்தைவிட இந்தப் பயண நேரம் குறைவு.

சன்னல் வழியே எட்டிப் பார்த்தால் எங்கிருக்கிறோம் என்று தெளிவாகத் தெரியும்.

விமானத்திற்குள் பயணிகளுக்கு எந்த வசதியும் இருக்காது.

குறுகிய பயணத்திற்கு அது அவசியமில்லையே?

விமானத்தில் எட்டுப் பேர் அமரலாம் ஆனால் விருப்பப்பட்ட இருக்கையைத் தேர்ந்தெடுக்க முடியாது.

அவர்களின் எடையைப் பொறுத்து இருக்கை ஒதுக்கப்படும்.

இந்த அரிய விமானச் சேவை கோடைக்காலத்தில் சுற்றுப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்