Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபருக்கு சிங்கப்பூர்த் தலைவர்கள் வாழ்த்து

வாசிப்புநேரம் -
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் (Lawrence Wong) தென்னாப்பிரிக்காவில் மீண்டும் அதிபராகப் பதவியேற்றிருக்கும் திரு சிரில் ராமபோசாவுக்கு (Cyril Ramaphosa) வாழ்த்து மடல் அனுப்பியிருக்கின்றனர்.

இரு நாட்டுக்கும் இடையிலான நட்பு 30 ஆண்டுகளாய் நீடிப்பதாகத் திரு தர்மன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது நடைபெறும் உயர்நிலைச் சந்திப்புகள் உட்பட, வர்த்தகம், முதலீடு, ஆகாயவெளித் தொடர்பு, தகவல்-தொடர்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பு இருந்துவருவதாகத் திரு வோங் சொன்னார்.

தென்கிழக்காசியாவில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்