உலகம் செய்தியில் மட்டும்
"இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை"- துபாய் வெள்ளத்தில் சிக்கிய சிங்கப்பூரரின் அனுபவம்
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: REUTERS/Amr Alfiky
அண்மையில் துபாயில் ஏற்பட்ட வெள்ளம் பலரது கவனத்தை அதன் பக்கம் திருப்பியுள்ளது.
2 ஆண்டுகளில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!
பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தில் சிக்கிய அய்னுன்நிசா அவரது அனுபவத்தைச் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.
"போக்குவரத்துச் சேவைகள் ரத்து"
"வெள்ளம் ஏற்பட்டபோது கடைத்தொகுதியில் சிக்கிக்கொண்டேன். டாக்சி எடுக்க முடியவில்லை. பேருந்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. Metro ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாக எனது உறவினர் அருகில் இருந்தார். அதனால் நானும் எனது இளம் மகளும் பத்திரமாக ஹோட்டலைச் சென்றடைந்தோம். இல்லாவிட்டால் இரவு முழுதும் கடைத்தொகுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்," என்றார் நிசா.
இளம் பிள்ளைகளுடன் இருந்த பெற்றோர்கள் கடைத்தொகுதியைவிட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
"எனது பிள்ளையின் நலனை நினைத்துப் பயந்தேன்"
வெள்ளத்தால் பல கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் அதனால் தமது பிள்ளைக்குப் பால் மாவு, உணவு ஆகியவற்றை வாங்க இயலுமா என்று பயந்ததாகவும் நிசா தெரிவித்தார்.
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் வருத்தப்பட்டார்.
"வானிலை நிலவரம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது"
நேற்றும் இன்றும் வானிலை வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிசா 'செய்தி'யிடம் சொன்னார்.
நாளை மறுநாள் (20 ஏப்ரல்) சிங்கப்பூருக்குத் திரும்பவிருப்பதை நினைத்துத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்வதாகவும் நிசா பகிர்ந்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi