Skip to main content
19 ஆண்டாய்த் தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

19 ஆண்டாய்த் தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆடவரும் அவருடைய மனைவியும் 51 மில்லியன் டாலர் மோசடிச் சம்பவம் தொடர்பில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் 19 ஆண்டாய்த் தலைமறைவாக இருந்தனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர்கள் இருவரையும் சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது.

Citiraya Industries நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான 58 வயது இங் டெக் லீ (Ng Teck Lee) 2005ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார்.

அவரின் மனைவி 55 வயது தோர் சுவீ ஹுவாவும் (Thor Chwee Hwa) அவருடன் சென்றார்.

அந்த ஆண்டு விசாரணைகள் தொடங்கின.

இங்கைக் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டதாகப் பிரிவு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டது.

இங் மீதும் அவருடைய மனைவி மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்