உலகம் செய்தியில் மட்டும்
"இவ்வளவு பெரிய கூட்டமா?" - மகா கும்பமேளாவில் சிங்கப்பூரர்களின் அனுபவம்

(படம்: Punit PARANJPE / AFP)
ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய அம்மாபெரும் விழா நாளை (26 பிப்ரவரி) நிறைவடையவுள்ளது.
144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளாவில் உலகம் முழுதுமிருந்து பல மில்லியன் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

சிங்கப்பூரர்கள் சிலரும் மகா கும்பமேளாவுக்குச் சென்றுவந்தனர்.
அவர்களில் அவி டிக்க்ஷிட், பிரியங்கா ஆகிய 2 இளையர்களிடம் பேசும் வாய்ப்பு "செய்தி"க்குக் கிடைத்தது.
அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்தபோது..
"பதற்றம் இல்லை ஆனால்..."
கும்பமேளாவுக்குச் செல்லும் முன் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அம்மாவிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறினார் அவி. நிறையத் தகவல்களைப் படித்தும் தெரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.
இதனால் பதற்றம் ஏற்படவில்லை; மாறாக ஆர்வம் மிகுதியாய் இருந்ததாக அவி கூறினார்.
"இவ்வளவு பெரிய கூட்டமா?..."
கும்பமேளாவில் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரியும். ஆனால் அது எவ்வளவு பெரிய கூட்டம் என்பதை நேரில் பார்த்தபோதுதான் உணர்ந்ததாக அவர் சொன்னார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிருந்த வரிசை விளக்குகளும் கூடாரங்களும் திரிவேணி சங்கமத்தை இன்னும் அழகாகக் காட்டியதாக அவி தெரிவித்தார்.

"திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்த தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது,"
என்றார் அவர் பெருமிதத்துடன்.
பிரயாக்ராஜில் இன்றைய நாள் 16 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவுகிறது என்றார் பிரியங்கா.

"ஆனால் குளிரை மக்கள் பொருட்படுத்தவில்லை. திரிவேணி சங்கமத்துக்கு அதிகாலை 3 மணிக்கே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர்,"


