Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒலிம்பிக் 2024: 100 மீட்டர் தகுதிச்சுற்றைக் கடந்தார் சிங்கப்பூரின் மார்க் பிரையன் லூயிஸ்

வாசிப்புநேரம் -

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிச்சுற்றை சிங்கப்பூர் வீரர் மார்க் பிரையன் லூயிஸ் (Marc Brian Louis) வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.

தேசியச் சாதனை வைத்திருக்கும் அவருக்கு 3ஆவது இடம் கிடைத்தது.

ஆனால் முதல் சுற்றுக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பு அவருக்கு இல்லை

மாறாக, தகுதிச்சுற்றை அதிவேகமாக முடித்த ஓட்டவீரர் என்ற முறையில் அவர் முதல் சுற்றுக்குச் செல்வார்.

முன்னதாக மார்க் ஓடிய சுற்றில் மலேசிய வீரர் அஸீம் ஃபமி (Azeem Fahmi) 10.42 விநாடிகளில் 2ஆம் இடத்தில் முடித்தார்.

அவருக்கு அடுத்து வெறும் 0.01 விநாடி வித்தியாசத்தில் மார்க் 3ஆம் இடத்தில் வந்தார்.

முதலிடத்தை காம்பியாவைச் (Gambia) சேர்ந்த
எப்ராஹிம் கமாரா (Ebrahim Camara) பிடித்தார். அவர் 10.31 விநாடிகளில் முடித்தார்.

குறிப்பு: மொத்தம் 6 பூர்வாங்கச் சுற்றுகள் நடைபெரூம். ஒவ்வொரு சுற்றிலும் முதல் 2 இடங்களைப் பிடிப்பவர்கள் முதல் சுற்றுக்கு நேரடியாக முன்னேறுவார்கள். இன்னும் 4 அதிவேக ஓட்டக்காரர்களுக்கு அந்தச் சுற்றில் வாய்ப்பு வழங்கப்படும்.
 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்