Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவில் நடைபெற்ற kitefoiling போட்டியில் சிங்கப்பூரின் மேக்ஸ் மேடருக்கு வெற்றி

வாசிப்புநேரம் -
சீனாவில் நடைபெற்ற kitefoiling போட்டியில் சிங்கப்பூரின் மேக்ஸ் மேடருக்கு வெற்றி

(படம்: Facebook/International Kiteboarding Association/IKA Media/Matias Capizzano)

சிங்கப்பூர் வீரர் மேக்ஸ் மேடர் (Max Maeder) சீனாவில் நடைபெற்ற ஆசிய நீர் சாகசப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

'kitefoiling' விளையாட்டின் முதல் தொடரில் 12 பந்தயங்களில் 8இல் வென்று அவர் முதலிடம் பிடித்தார்.

இன்று (22 செப்டம்பர்) பலத்த காற்று வீசியதால் பந்தயம் நடைபெறவில்லை. மேடர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு போட்டியில் அவர் இரண்டாம் இடத்தில் வந்தார்.

அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மேடர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பிறகு அவர் வென்றுள்ள இரண்டாவது போட்டி இது.

இம்மாதத் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற IKA KiteFoil உலகத் தொடர் போட்டியிலும் மேடர் வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்